தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைந்ததையடுத்து ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு கொரோனா நிதி, மளிகை பொருட்கள் வழங்கபட்டன.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “மக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசி இனி தரமான அரிசியாக விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வரிடம் அனுமதி பெற்று 21 நுகர்பொருள் வாணிப கழக அரிசி ஆலைகளில் பழுப்பு அரிசி, கல் போன்றவற்றை நீக்க கலர் சார்டெக்ஸ் என்ற நவீன முறையை பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.