தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் அவ்வப்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு செல்லாமலேயே பொருட்களை வாங்க ஒரு திட்டம் உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.தங்களால் கடைகளுக்கு வர இயலாதவர்கள் தங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமித்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.இதற்கு ரேஷன் கடைகளில் கிடைக்கும் படிவத்தை நிரப்பி வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மாவட்ட வளங்கள் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.