ரேஷன் பொருட்களை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் பொருட்களை மக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று வரிசையில் நிறு தான் வாங்க வேண்டும். இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தை பிப்ரவரி 1 முதல் அமல் படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5 கோடி 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இது மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.