தபால் அலுவலக வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.தபால் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது நிறைய வசதிகளை வழங்கி வருகின்றது. கடந்த மே 20 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி இனி தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். NEFT, RTGS ஆகிய வசதிகள் தபால் நிலையங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வசதிகள் கடந்த மே மாதம் முதல் தபால் நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு 24 x 7 என்ற அளவில் கிடைக்கின்றது. அனைத்து வங்கிகளும் இந்த வசதிகளை வழங்குகின்றன. தற்போது தபால் நிலையமும் இந்த வசதியை வழங்குவதால் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளன. இந்த புதிய வசதியின் மூலமாக மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்புவது மிகவும் எளிதானதாக மாறிவிட்டது. இதன் மூலம் பணம் பரிமாற்றம் செய்வது மிக விரைவில் முடிந்து விடும். ஆனால் இதில் சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளது. NEFT மூலமாக பணம் பரிமாற்றம் செய்வதற்கு எந்த ஒரு வரமும் கிடையாது.
RTGS முறையில் ஒரே நேரத்தில் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும். இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். NEFT பரிவர்த்தனை செய்தால் பத்தாயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ரூ.2.50 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மேலும் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ஐந்து ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதனைப் போலவே இரண்டு லட்சத்திற்கும் மேல் பரிவர்த்தனை மேற்கொண்டால் 25 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.