Categories
உலக செய்திகள்

இனி லிவிங் டுகெதரில் வாழ்ந்தால் “இதுதான் தண்டனை”…. பிரபல நாட்டில் இயற்றப்பட்ட புதிய சட்டம்…. போராட்டத்தில் குவிந்த மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் தவறான முறையில் உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் திருமணமானவர்கள் தங்களது உறவினை தாண்டி மற்றொருவருடன் உடலுறவு வைத்து வருகின்றனர். இதற்கு  தனியாக எந்த  சட்டமும் இயற்றப்படவில்லை. இந்நிலையில்  பிரபல நாடான இந்தோனேசிய அரசு  விதிமுறைகளை  அமல்படுத்த  முடிவு செய்துள்ளது. அதில் பெண்ணோ, ஆணோ ஒருவரை  திருமணம் செய்து  தங்களது வாழ்க்கை துணையாக ஏற்ற பிறகு மற்றொருவருடன் உறவு வைத்துக் கொள்வதற்கு தடை விதித்துள்ளது.

அதையும் மீறி பாலியல் உறவில் ஈடுபடுபவர்களுக்கு  ஒரு வருடம் சிறை தண்டனையும், லிவிங் டுகெதர் என அழைக்கப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த விதிமுறை வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்துறையை பிரதான வருவாயாக கொண்டுள்ள இந்தோனேசியாவிற்கு இது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |