இந்தியாவில் உள்ள அனைத்துவங்கிகளுக்கும் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் தொடங்குவதற்கு முன்பாகவே விடுமுறை பட்டியல் வெளியிடப்படுகிறது.
தற்போது 2 மற்றும் 4 வதுசனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.