இந்தியாவின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆன்லைனில் எஸ்பிஐ இன்ஸ்டா பிளஸ் சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக வீடியோ கேஒய்சி பயன்படுத்தி இன்ஸ்டா பிளஸ் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். மேலும் எஸ்பிஐ யோனா ஆப் பயன்படுத்தி இந்த கணக்கை தொடங்க முடியும்.
இந்த வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் மற்றும் பான் ஆகிய ஆவணங்கள் மட்டுமே தேவை. மேலும் சேமிப்பு கணக்கு தொடங்குவோருக்கு ரூபே ஏடிஎம் டெபிட் கார்டு வழங்கப்படும் எனவும் NEFT, IMPSபோன்ற பண பரிவர்த்தனை வசதிகளும் உள்ளதாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.