Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கே போக வேண்டாம்…. ஆதார் கார்டு இருந்தா மட்டும் போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. வங்கி சேவைகள் தொடங்கி அரசாங்க திட்டங்களை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு அவசியமான ஒன்று. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் கட்டாயம் மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்தும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.இருந்தாலும் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை  பயன்படுத்தி எந்த ஏடிஎம் அல்லது வங்கிக்கிளைக்கு  செல்லாமல் உங்க வங்கி கணக்கில் இருக்கும் இருப்பை சரிபார்த்து கொள்ள முடியும்.

ஆதார் அமைப்பின் தரவுகளின் படி மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை வங்கி மற்றும் மொபைல் எண்களுடன் இணைத்து இருந்தால் இணைய இணைப்பு இல்லாமலே இந்த சேவைகளை பயன்படுத்த முடியும்.அதனால் மூத்த குடிமக்கள் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வங்கி கிழக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் தங்கள் வங்கி விவரங்கள் அனைத்தையும் சரி பார்த்துக்கொள்ள முடியும். அதாவது ஆதார் கார்டு மூலம் வங்கி இருப்பை எளிதில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

அதற்கு முதலில் பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் எண்ணில் இருந்து *99*99*1#என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு UIDAI லிருந்து உங்களின் மொபைல் திரையில் பிளாஸ் எஸ்எம்எஸ் மூலம் வங்கி இருப்பு விவரம் உங்களுக்கு தோன்றும்.

Categories

Tech |