உலக வானிலை நிறுவனம் பூமியின் வெப்பநிலை பதிவுகளை ஆராய தொடங்கியதில் இருந்து இதுவரை ஏழு ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகளாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 2021-ஆம் ஆண்டும் உண்டு என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை உலக வானிலை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது சராசரி உலக வெப்பநிலை கடந்த ஆண்டில் 1.11 டிகிரியாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. இருப்பினும் “எல் நினா” எனப்படும் சீதோஷ்ண நிலை மாற்றம் கடந்த ஆண்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். அதாவது “எல் நினா” என்பது பருவநிலையை மழை நிறைந்ததாகவும், குளிர்ச்சியாகவும் மாற்றக்கூடியது.
இருப்பினும் வெப்பநிலை போதிய அளவு குறையாததால் வெப்பமான ஆண்டாக கடந்த ஆண்டு இருந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இனி வரும் ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது 2021 மிக குளிர்ச்சியான ஆண்டாகவே தெரியும் என்று உலக வானிலை நிறுவனம் கணித்து கூறியுள்ளது.