Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி வரும் நாட்களில் முட்டை விலை….. முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்….!!!!

இனிவரும் நாட்களில் முட்டை விலை ரூபாய் 6 வரை உயரும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4 மாதங்களில் தீவன விலை உச்சபட்சமாக உயர்ந்ததால் பண்ணைகளை நடத்த முடியவில்லை என்று தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஒரு லட்சம் கோழி வைத்திருந்த பண்ணையாளர்களுக்கு நான்கு மாதங்களில் 2.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பால் கோழிக்குஞ்சுகளை பண்ணைகளில் விடுவது நிறுத்தப்பட்டுள்ளன.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 60% மட்டுமே நடைபெறுகிறது. தீவன விலை உயர்வால் வங்கி கடன் செலுத்தும் கோழிப்பண்ணைகளை நடத்தவும் முடியவில்லை. சத்துணவு டெண்டருக்கும் முட்டை விலை உயர்வுக்கும் சம்பந்தமே இல்லை. இது குறித்து தவறான கருத்து நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |