பிரிட்டனில் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து பாரத் திட்டத்தின் கீழ் அந் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதை தொடர்ந்து அந்நாடுகளில் தங்கி உள்ள இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் திரு அனுராத் ஸ்டீபன் ஸபா, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 40 லட்சம் இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், பிரிட்டனில் புதிய வகை வைரஸ் தொற்று பரவுவதை தொடர்ந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அந்நாட்டு நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.