Categories
அரசியல்

இனி வாட்ஸ் அப்பில் 30 நொடிகளில் கடன் வாங்கலாம்…. வெளியான அசத்தலான அறிவிப்பு….!!!!

இனி வெறும் 30 நொடிகளில் கடன் வாங்குவதற்கான புதிய திட்டத்தை வாட்ஸ் அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் வணிக பயனாளிகள் மட்டுமே இந்த கடனை பெற முடியும். இந்த புதிய கடன் திட்டத்தை CASHe என்ற முன்னணி கடன் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதன் மூலமாக வெறும் 30 நொடிகளில் கடனுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.இதில் கடன் பெறுவதற்கு எந்த ஒரு ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் போனில் வாட்ஸ் அப் இருந்தால் மட்டுமே போதும்.

எப்படி கடன் பெறுவது?

அதற்கு உங்கள் மொபைலில் 8097553191 என்ற எண்ணை பதிவு செய்து கொள்ளவும். அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக hi என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இதையடுத்து கடன் தொடர்பான தகவல் உங்களுக்கு வந்து சேரும். இந்த சேவை 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.இதில் உங்களது விவரங்கள் அனைத்தையும் ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக முழுவதும் சரிபார்க்கப்படும் . அதன் பிறகு உங்களுக்கு எவ்வளவு தொகை வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் நீங்கள் எவ்வளவு கடன் பெறலாம் என்ற தகவல் உங்களிடமே சொல்லப்படும்.

Categories

Tech |