Categories
தேசிய செய்திகள்

இனி வாட்ஸ் அப் மூலம் “எச்டி” வீடியோ அனுப்பலாம்… வரப்போகும் புதிய அப்டேட்….!!!

தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். பலராலும் பயன்படுத்தப்படும் சேவையாக தற்போது இருந்து வருகின்றது. இதன் மூலம் மக்கள் செய்திகளை பகிர்வது, வீடியோ, புகைப்படம் போன்றவற்றை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். வாட்ஸ்அப் சமீபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து வாட்ஸ்அப் செயலி எந்த ஒரு தனிநபரின் உரிமைகளை பாதிக்காது என்று உத்திரவாதம் அளித்தது.

இதையடுத்து மக்களைக் கவர்வதற்காக பல வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்து வருகின்றது. இருப்பினும் அறிமுகமாகி 12 ஆண்டுகள் ஆகியும் வாட்ஸப்பில் இன்னும் ஹச்டி வீடியோக்களை பகிர முடியாத நிலையே நீடிக்கின்றது. ஆனால் இந்த நிலை இன்னும் சில நாட்களில் மாறப்போகிறது. விரைவில் வாட்ஸ் அப்பில் எச்டி வீடியோக்களை அனுப்ப முடியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. வருகிற 2.21.14.6 அப்டேட்டில் இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |