போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் தற்போது செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு அதனை பயன்படுத்துகிறார்கள். பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் காலம் ஓடிப்போய் தற்போது வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை, வணிகர்களின் இனி வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருந்த நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் வாய்ஸ் நோட்டிபிகேஷன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி phone or business என்ற ஆப்பில் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.…