Categories
மாநில செய்திகள்

இனி வாரத்திற்கு 3 முட்டைகள், பிஸ்கட்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது அதே சமயம் அண்மையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது என அடுத்தடுத்த மாணவர்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய சரிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும் என்றும் அங்கன்வாடி மையத்தில் 1 முதல் 3 வயதிலான  குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி மூன்று முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |