Categories
தேசிய செய்திகள்

இனி வாரத்தில் 2 நாட்கள் வேலைக்கு வாங்க போதும்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…..!!!!

கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதி வாரத்தில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் அலுவலக ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றினர். அதன்படி விப்ரோ பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் பணியாளர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் அலுவலகத்திற்கு திரும்புகின்றனர்.

இதுகுறித்து விப்ரோ தலைவர் ரிசத் பிரேம்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 18 மாதங்களுக்குப் பிறகு பணியாளர்கள் இன்று முதல் அலுவலகத்திற்கு வர உள்ளனர். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டதாகவும், வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு வந்து சமூக இடைவெளியுடன் பணியாற்றுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |