Categories
சினிமா தமிழ் சினிமா

இனி விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது…. வெளியான தகவல்… செம குஷியில் ரசிகர்கள்…!!!!!

ஜெர்மனியில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஒரே நாளில் 13 காட்சிகள் திரையிடப்பட இருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட்  திரைப்படத்தை பற்றி தான் எங்கு திரும்பினாலும் பேச்சு. அந்த அளவிற்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்து இருக்கின்றது. தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது.

அதனால் முன்பதிவின் மூலமாகவே படம் வெளியாகாமல் பல கோடி லாபம் பார்த்தது பீஸ்ட் திரைப்படம். இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் பீஸ்ட் சாதனை படைத்திருக்கிறது. கேரளாவில் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஒரு நாளில் 50 காட்சிக்கு மேல் திரையிடப்பட இருக்கிறது. இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் பீஸ்ட் படத்தின் முன்பதிவு அமோகமாக தொடங்கியது.

முதல் முறையாக ஜெர்மனி நாட்டில் பீஸ்ட் படத்திற்கு பதிமூன்று காட்சிநேரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் படத்திற்கு ஜெர்மன் நாட்டில் இந்த அளவிற்கு காட்சி நேரங்களை ஒதுக்கி உள்ளது இதுவே முதன்முறையாகும். எனவே ஜெர்மனியில் திரைப்படம் ஒரே நாளில் 13 காட்சிகள் திரையிடப்படும் இந்த தகவல் விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |