தமிழகத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் இதில் தனி கவனம் செலுத்தி வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள் அனுமதி பெறாமல் விடுப்பு எடுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் இனி போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் அனுமதி பெறவேண்டும் என்ற புதிய உத்தரவை போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது.
Categories