Categories
உலக செய்திகள்

இனி விமான கட்டணம் குறைவு…. பிரிட்டன் அரசின் சூப்பர் முடிவு…. குஷியான பயணிகள் …!!

பிரிட்டனில் விமானங்களின் வரிகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பரவலால் விமானத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பழையபடி சீராக்குவதற்கு உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் வரியை குறைக்க போவதாக தெரிவித்துள்ளார். உள்நாட்டு பயணங்களை அதிகரிக்க பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 20 மில்லியன் யூரோ செலவில் கடல் சாலை மற்றும் விமான இணைப்புகளை பயன்படுத்தப் போவதாக போரிஸ் ஜான்சன் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

மேலும் பிரிட்டன் போக்குவரத்து துறை விரைவில் வெளிநாட்டு பயணங்களுக்கும் சலுகைகள் வழங்கப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த முடிவு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்  அடிப்படையில்  பயண வரியை அதிகரித்ததால் அதனை சீர்திருத்துவதற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது .பிரிட்டன் விமான நிலையத்திலிருந்து மற்ற இடத்திற்கு போகும் பயணிகளிடம் அவர்கள் போகும் தூரம், அவர்கள் எடுத்துள்ள இருக்கை வகுப்பை பொறுத்து அவர்களிடம் வரிகள் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |