Categories
மாநில செய்திகள்

இனி விருப்பம்போல் பயணிக்கலாம்…. ரொம்ப கம்மியான கட்டணத்தில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது.. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில்  சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் 100 கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் 100, பயண அட்டைக்கு 50 கட்டணமும் செலுத்தி சலுகை டிக்கெட்டை பெறலாம். இதில் ஒருநாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். கடைசி பயணத்தை முடிக்கும் போது பயண அட்டையை திருப்பி கொடுத்துவிட்டு 350 திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதேபோல, 2,500 செலுத்தி மாதாந்திர பயண கட்டண சலுகையையும் பெற்றுக்கொள்ளலாம்.

Categories

Tech |