Categories
பல்சுவை

இனி வீட்டிலிருந்தே ஈசியா லோன் வாங்கலாம்…. வட்டியும் ரொம்ப கம்மி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

உங்களுக்கு ஏதாவது அவசர தேவை இருந்தால் அதனை பூர்த்தி செய்துகொள்வதற்கு இதுவே சரியான நேரம். நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளராக இருந்தால் மட்டும் போதும். குறைந்த வட்டியில் அதிக கடன் பெறலாம். இதற்கு நீங்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஈஸியாக கடன் பெறலாம். நள்ளிரவில் கூட கடன் பெறும் வசதி உள்ளது. அதற்கு எஸ்பிஐ யோனோ ஆப் இருந்தால் மட்டும் போதும். இதனை வைத்து எப்படி கடன் வாங்குவது என்பது பற்றி இதில் விரிவாக பார்க்கலாம்.

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் SBI YONO ஆப் டவுன்லோடு செய்து,  லாகின் செய்யவும்.

அடுத்ததாக ’Avail Now’ என்ற வசதியை கிளிக் செய்து நீங்கள் கடன் வாங்க விரும்பும் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதைப் பதிவிட்டு ‘submit’ கொடுத்தால் கடன் கிடைக்கும்.

நீங்கள் கடன் பெறத் தகுதியுடையவரா என்பதை முன்கூடியே தெரிந்து கொள்ளலாம். அதற்கு 567676 என்ற நம்பருக்கு PAPL space கடைசி நான்கு இலக்க வங்கிக் கணக்கு எண்ணை டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.

உதாரணம்: PAPL 4321, இதில் நீங்கள் வாங்கும் கடனுக்கான வட்டி 9.60 சதவீதம் முதல் ,தொடங்குகிறது. பண்டிகை கால சலுகையில் செயல்பாட்டுக் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. வாரத்தின் 7 நாட்களும் இதில் நீங்கள் கடன் பெறலாம். வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

Categories

Tech |