தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து பென்ஷன் வருவதற்கு தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வாழ்நாள் சான்று என்பது ஓய்வூதியதாரர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இதை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தொடர்ந்து பென்ஷன் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதை சமர்ப்பிக்க தவறினால் பென்ஷன் கிடைக்காமல் போகும். இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் இருப்பிடங்களுக்கு சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வீணாக அலைய தேவையில்லை. அஞ்சல் துறை வாயிலாக ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பங்க் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நிதி அமைச்சர் பிடிஆர் முன்னிலையில் கையெழுத்தானது. இதனால் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.