Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

இனி வெப்சைட்டில் கேட்டு தரிசிக்கலாம் …. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததனால் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கினால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களையும் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பழனி மலைக் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பழனி மலைக் கோயிலில் நடக்கும் ஆறு கால பூஜைகளையும் இனி வெப்சைட்டில்ஒலி தொகுப்பாக கேட்கலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாலாறு அணையிலிருந்து ரூ.22.62 கோடியில் பிரத்தியேக குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருவதாகவும், அங்கு தினக்கூலியாக உள்ள 30 ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |