Categories
தேசிய செய்திகள்

இனி வெளி மாநிலங்களில் இருந்தும் வாக்களிக்கலாம்?…. ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறிமுகம்…..!!!!

வெளிமாநிலங்கள் (அல்லது) தொலை தூரத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தொலை தூரத்தில் வாக்களிக்கும் அடிப்படையில் பல்வேறு தொகுதிகளுக்கான தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கான முன் மாதிரி ஒன்றை உருவாக்கி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

அதாவது, ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஆர்விஎம்) ஒரு தொலைதூர வாக்குச்சாவடியில் இருந்து பல்வேறு தொகுதிகளைக் கையாள முடியும். ஆகவே புலம்பெயர்ந்தோர் தங்களது மாநிலங்களுக்கு வெளியே இருப்பவர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Categories

Tech |