சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை மாவட்டத்தின் முன்னாள் மேயராக இருந்தவர் சிவராஜின் . இவரின் 131 -வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தற்போது மேயராக உள்ள பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மின்ட் தங்க சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா கூறியதாவது. சென்னையில் மழைக்காலங்களில் அதிகமாக வெள்ளம் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. இன்னும் 5 சதவீத பணிகள் அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும். இந்த பணிகளை கண்காணிக்க 15 மண்டலத்திற்கு 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்திருக்கிறோம். மேலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் அந்தப் பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். இது குறித்து நாங்கள் மின்சாரத்துறை மற்றும் மெட்ரோ துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.