வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை அதிகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவு செய்வதற்கான வரம்பை இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் 10 சதவிகிதம் உயர்த்த பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் செலவு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் குழு ஒன்றை அமைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பரிந்துரைகளின்படி தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது.
அதன்படி நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் இதுவரை 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 95 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் இனி 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இப்புதிய வரம்புகள் இனி வரும் எல்லா தேர்தல்களுக்கும் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.