அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையானது புதிய யுத்திகளை அவ்வபோது அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இன்று முதல் பயன்படுத்தப்பட உள்ளது.
ஆதார் எண் மூலம் ஆசிரியர்கள் கைரேகை வைத்த உடன் வருகை நேரம் ஆனது உடனடியாக பதிவு செய்யப்பட்டுவிடும். இம்முறை ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை தவிர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது