Categories
தேசிய செய்திகள்

இனி ஸ்மார்ட் போன், லேப்டாப் எல்லாத்துக்குமே ஒரே சார்ஜர் தான்…. அமலுக்கு வரும் புதிய சட்டம்…..!!!!

அனைத்துவித மின் சாதனங்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை அனுமதிக்கும் சட்டம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் பதிவானது. இந்த சட்டத்தின் அடிப்படையில் இனி ஸ்மார்ட் போன்கள், லேப்டாப் மற்றும் கேமரா உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்களுக்கும் ஒரே வகையான சார்ஜர் இருக்கும்.

2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்கள் USB Type-C சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு மடிக்கணினிகளுக்கும் இந்த விதிமுறை நீட்டிக்கப்படும். இந்த சட்டம் ஆப்பிள் ஐபோன்களுக்கு பொருந்தும் என்றும் இது விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |