கரூர் மாவட்டத்தில் வருகின்ற 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்த சேவையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளார். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அருகே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Categories