கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பரவலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதிப்பு காரணமாக வழக்கமாக இயக்க வேண்டிய விரைவு ரயில்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை.
இருப்பினும் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னைசென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர்-யஸ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா-மைசூர் (02577/02578), முஜாபர்பூர்- யஸ்வந்த்பூர் (05228/05227) ஆகிய 10 சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது இயக்கப்படும். அதே நேரத்தில் அதே வழித்தடத்தில் இயங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.