இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாக மாறிவிட்டது என்றே கூறலாம். உதாரணமாக நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் பேருந்து, ரயில், விமானம் போன்ற பல்வேறு சேவைகள் மூலமாக நாம் வேகமாக சென்று விடலாம். இந்நிலையில் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஒரு ஸ்பேஸ் நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் மனிதர்களை மார்ஸ் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோஸ் புளூ ஆர்ஜின் என்ற ஸ்பேஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக ஜெப் பெசோஸ் கூறியுள்ளார்.
இதேப்போன்று அமெரிக்காவில் இருக்கக்கூடிய பிரபல Venus aerospace நிறுவனம் ஹைபர் சோனிக் விமானத்தை தயாரித்து வருகிறது. இந்த விமானத்தின் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாக செல்ல முடியும். இந்த விமானத்தின் அதிகபட்சமாக வேகம் 14,000km/h ஆகும். இந்த விமானம் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 1 மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம் என கூறப்படுகிறது. மேலும் ஹைபர் சோனிக் விமானம் இன்னும் சில வருடங்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.