தமிழகத்தில் ஷேர் ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும் போது விபத்து ஏற்படுகிறது. அதனால் 10 நபர்களுக்கு மேல் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் எத்தனை ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளன என்றும் காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் பெயரில் எத்தனை ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவை மறைமுக ஷேர் ஆட்டோவில் 10 பேருக்கு மேல் பயணிக்க அனுமதிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.