Categories
மாநில செய்திகள்

இனி 15 நாட்களில் ரேஷன் கார்டு…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு சீக்கிரமாக கிடைப்பதில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு  வழங்கப்படும். அரிசி ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். அரிசி கடத்தலில் ஈடுபடுவதில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |