ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஜியோவிற்கு பலரும் மாறி வருகின்றனர். இந்நிலையில் ஜியோ நிறுவனம் ரூபாய் 1,999-க்கு ஜியோ போன் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு இலவச டேட்டா, அன்லிமிட்டட் அழைப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரூ.1,499 க்கு இலவச ஜியோ போன் மற்றும் ஒரு வருடங்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படும். ஏற்கனவே ஜியோ போன் வைத்திருப்பவர்கள் ரூபாய் 749 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் டேட்டா அழைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.