தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன
அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வகையில் பப்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையும், 5 நட்சத்திர ஹோட்டல்களில் 24 மணி நேரமும் பார்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் ஹோட்டல்களில் காலை 11 மணி முதல் 2 மணிவரை செயல்பட அனுமதி அளித்துள்ளது.