நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் வங்கியின் கடன் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டத்தை வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தனது ஆன்லைன் தளம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் கடனை வழங்குகின்றது.
இவ்வாறான வாக்குறுதியை செயல்படுத்தும் முதல் வங்கி ஹெச்டிஎஃப்சி என்று கூறியுள்ளது. இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. வீட்டுக்கடனுக்கு பிறகு வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கும் பணமாக கார் கடன் இருக்கின்றது. அதனால் தான் வங்கி இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொது வங்கி நடைமுறைகளின் படி கார் கடனை பெறுவதற்கு சராசரியாக 48 முதல் 72 மணி நேரம் ஆகும். இந்நிலையில் வங்கியை அணுகாமல் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் 2023 ஆம் நிதி ஆண்டில் 10 ஆயிரம் கோடியில் முதல் 15,000 கோடி வரை கடன் வழங்குவதாக ஆன்லைன் சேவை மூலம் எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.