Categories
மாநில செய்திகள்

இனி 52 வாரங்களுக்கு….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!!!

52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத் துறையை சார்ந்து 165 அறிவிப்புகளை அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது “திருக்கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு சிறப்பு கட்டண சீட்டு வழங்கப்படும். நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும். 10 கோவில்களில் அன்னதான திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 14 கோவில்களில் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான 80 கோயில்களில் 100 கோடி மதிப்பீட்டில் அரசு நிதி மூலம் புனரமைப்பு செய்யப்படும். தமிழ் மூதாட்டி அவ்வையார் பெயரில் ரூபாய் ஒரு கோடியில் மணிமண்டபம் மற்றும் மூன்று நாட்கள் அரசு விழா, மயிலை, நெல்லை, தஞ்சை, திருவண்ணாமலை கோவில்களில் மகா சிவராத்திரி அன்று மாபெரும் விழா, திருமணம் செய்யும் மனம் மக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோவில் சார்பில் புத்தாடை வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மேலும் 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |