Categories
தேசிய செய்திகள்

இனி 6 மாதங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக உள்ளூர் தயாரிப்புகளுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது.அப்போதிலிருந்து தற்போது வரை நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி ஒன்பது மாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான கால இடைவெளி ஒன்பது மாதங்களில் இருந்து 6 மாதங்களாக தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால அவகாசம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |