மற்ற கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருள்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவை தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும்.
இந்நிலையில் கிரெடிட் கார்டுகளின் EMIகளை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட தவறினால், அடுத்த நாட்களுக்குள் கட்டலாம் என்ற ஆர்பிஐயின் அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 3 நாட்களுக்குள் EMI கட்டினால் தாமதமாக கட்டியதற்கு எந்த ஒரு அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது. கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படாது. ஆனால், 3 நாட்களை தாண்டினால் அபராதம் விதிக்கப்படும்.