ஆஸ்திரேலியாவில் முகநூல் வழியாக செய்திகளைப் படிக்கவும், பகிரவும் முகநூல் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
முகநூல் நிறுவனம் அதன் ஆஸ்திரேலிய பயனர்களுக்கான முக்கியமான ஒரு செயல்பாட்டை நீக்கி உள்ளது. முகநூல் சமூக ஊடகங்களில் செய்தி உள்ளடக்கத்தை பார்க்க, பகிர மற்றும் தொடர்பு கொள்ள தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் முன்மொழியப்பட்ட சட்டத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திகளை வெளிப்படுத்த பணம் செலுத்த கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக முகநூல் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.