Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்சுரன்ஸ் நிறுவனம் தனியார்மயமா….? அறிக்கையை வாபஸ் பெறுங்கள்…. போராட்டத்தில் ஊழியர்கள்….!!

மதுரையில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி மாதம் 2021 – 2022 கான ஆண்டறிக்கையை மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில் பொதுத்துறை இன்சுரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குதல் என்ற திட்டம் இடம்பெற்றிருந்தது. மத்திய அரசின் இத்திட்டத்தினை கண்டித்தும் , அதனை திரும்ப பெற வேண்டியும் மதுரை மாவட்ட பொது இன்சுரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பாக , இன்சூரன்ஸ் ஊழியர்களும் அலுவலர்களும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர் .

மேலும் இப்போராட்டம் மதுரையின் மேல வீதியிலுள்ள, “யுனைடெட் இந்திய இன்சுரன்ஸ் ” அலுவலகத்தின் முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஓய்வுபெற்ற இன்சுரன்ஸ் ஊழியர்களும் , தற்போது இன்சுரன்ஸ் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்களும் கலந்து கொண்டனர் .

Categories

Tech |