பொதுவாக பொதுமக்கள் உடல் நல இன்சூரன்ஸ், விபத்து இன்சூரனஸ், ஆயுள் காப்பீடு இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த இன்சூரன்ஸ் திட்டங்களின் கால அவகாசம் முடிவடைந்தும் சிலர் பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து உங்கள் பணத்தை எப்படி பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது பணம் கிடைக்காவிட்டால் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் குறை தீர்க்கும் அதிகாரியிடம் முதலில் புகார் கொடுக்க வேண்டும்.
இதற்கு அருகிலுள்ள காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ புகார் கொடுக்கலாம். இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் புகார் தீர்க்கப்படவில்லை என்றால் IRDAI-ல் புகார் கொடுக்கலாம். இந்த புகாரை IMGS-ஐ பயன்படுத்தி @irdai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கலாம். இதிலும் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் இன்சூரன்ஸ் ஒம்புட்ஸ்மேனிடம் புகார் கொடுக்கலாம்.