Categories
தேசிய செய்திகள்

இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைபவர்களுக்கு…. இனி இது கட்டாயம்…. IRDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!!

காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். இதுவரை காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு என்பது கட்டாயம் கிடையாது. காப்பீடு திட்டத்தில் இணைபவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே கேஒய்சி சரி பார்ப்பை செய்து கொள்ளலாம்.

ஆனால் தற்போது காப்பீடு திட்டங்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக கேஒய்சி சரிபார்ப்பை IRDAI கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டதால், பிரிமியர் தொகையுடன் கேஒய்சி சரி பார்ப்பிற்கான தொகையும் வசூலிக்கப்படும். இதன் காரணமாக நவம்பர் மாதம் முதல் காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியர் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |