கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்க் வியூ பஜாரில் போரஸ் என்பவர் பேன்சி கடை வைத்து அதனை 9 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. அதில் ஒரு சில கடைகளுக்கு சம்பவம் நடந்த ஒரு ஆண்டுக்குள் இன்சூரன்ஸ் தொகை வந்தது. ஆனால் போரஸ் செலுத்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மட்டும் பணம் வரவில்லை. இதனால் போரஸ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். விபத்து நடந்த தினத்திலிருந்து 6 சதவீத வட்டியுடன் சேர்த்து அபராத தொகை, வழக்கு செலவு 10 ஆயிரம் ரூபாய், இன்சூரன்ஸ் தொகை ஆகியவற்றை 1 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.