Categories
அரசியல்

இன்சூரன்ஸ் பாலிசி….. பொதுமக்களுக்கு IRDAI அமைப்பு எச்சரிக்கை…..!!!!

இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை யாரும் வாங்க வேண்டாம் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான IRDAI தெரிவித்துள்ளது.

காப்பீடு என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியம். அதுவும் தற்போது தொற்றுக்கு பிறகு அனைவரும் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க தொடங்கியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் நிறைய பாலிசிகளும் அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அதிலும் நம்பகத்தன்மை தெரியாமல் பலர் அந்த பாலிசியை எடுத்து வருகின்றன. இன்ஷூரன்ஸ் தொடர்பான விஷயங்களை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான IRDAI தான் கண்காணிக்கிறது. இந்த அமைப்பில் பதிவு செய்த காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே நம்பகத் தன்மை கொண்டதாக இருக்கும்.

அவ்வாறு பதிவு செய்யாத நிறுவனங்களிடமிருந்து இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. இவன் ஹெல்த் என்ற நிறுவனம் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்யாமல் இயங்கி வருகிறது.  இந்த நிறுவனத்தின் பாலிசிகளை யாரும் வாங்க வேண்டாம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த www.even.in வெப்சைட் பெயரில் தான், இன்சூரன்ஸ் பாலிசியை இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.  வாடிக்கையாளர்களின் புரிதல் மற்றும் தேவைக்காக ஐஆர்டிஏஐ அமைப்பு ஒரு லிங்கை ஷேர் செய்துள்ளது. இது அதிகாரபூர்வமான காப்பீட்டு நிறுவனங்களுக்கான பட்டியல் என்று தெரிவித்துள்ளது.

https://www.irdai.gov.in/ADMINCMS/cms/NormalData_Layout.aspx?page=PageNo264&mid=3.2.10

Categories

Tech |