Categories
மாநில செய்திகள்

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது….? யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு…. இதோ முழு விபரம்….!!!!

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு பற்றிய முக்கிய தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இன்ஜினியரிங் படிப்புகளில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இருக்கும் இட ஒதுக்கீடுகளில் உள் ஒதுக்கீடாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கலந்தாய்வின்போது பழங்குடியின மாணவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். சமூக நீதியின் படி எல்லா பிரிவுகளிலும் உள்ள இட ஒதுக்கீடுகளில் உள் இட ஒதுக்கீடாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த ஒதுக்கீடு 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த வருடம் முதல் இன்ஜினியரிங் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதோடு நட்பாண்டிலேயே புதிய பாடத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதனையடுத்து செப்டம்பர் 10 முதல் 12-ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், செப்டம்பர் 25 முதல் 27 வரை 2-ம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 13 முதல் 15 வரை 3-ம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 29 முதல் 31-ஆம் தேதி வரை 4-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு நவம்பர் 10 முதல் 20 வரை SC, ST பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றார். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, செப்டம்பர் மாத இறுதியில் திறக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Categories

Tech |