அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில் இரண்டு நாள் கருத்தரங்கம் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை படிக்கும்போதே வேலை வாய்ப்புக்கு ஏற்ப தயாராகும் வகையில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து வருகிற 22,23-ஆம் தேதிகளில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அண்ணா பல்கலை கழக வளாகத்தில் நடத்துகிறது.
இந்நிலையில் இதன் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். மேலும் நேரிலும் ஆன்லைனிலும் மொத்தம் ஏழாயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ள கருத்தரங்கில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் கண்டுபிடிப்புகள் அடங்கிய கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த படைப்பு மற்றும் திறன் மிகுந்த மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.