தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்டதால் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டர் நேரடி முறையில் நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் B.E, B.Tech, B.Arch மாணவர்களுக்கான 2,4,6,8 ஆவது செமஸ்டர் தேர்வுகள் ஜூலை 5 ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.