கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் ஆர்.வி.எல் நகரில் இன்ஜினியரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராம் நகரில் இருக்கும் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சங்கர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த கடிதத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை இழந்ததாலும், கடன் இருப்பதாலும் தற்கொலை செய்து கொள்கிறேன் என சங்கர் எழுதியுள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் சங்கர் வேலைக்கு சேர்ந்தார். முதலில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட போது அவருக்கு சிறிய தொகை கிடைத்தது.
இதனையடுத்து சூதாட்டத்திற்கு அடிமையாகி நண்பர்களிடம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் அவருக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது. இதனால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் சங்கர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அவரது நண்பர்கள் கூறும்போது, பொதுநல சேவையில் சங்கர் அக்கறையுடன் செயல்படுவார். சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் வேலை செய்து தற்போது வெளிநாடு செல்ல நுழைவு தேர்வு எழுதியிருந்தார். சங்கர் இறந்ததாக வந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.