Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்ஜினியர் தற்கொலை…. ஹோட்டல் அறையில் சிக்கிய கடிதம்…. பெரும் சோகம்…!!!

இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கர்(29) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான சங்கர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடன் தொந்தரவால் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சங்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அளவுக்கு அதிகமான கடன் ஏற்பட்டது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என சங்கர் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |